Tik Tok காணொளிகளூடாக பிரபலமடைந்த - உணவுப்பொருள் ஒன்றுக்குத் பிரான்சில் தடை!

18 புரட்டாசி 2024 புதன் 09:35 | பார்வைகள் : 11064
டிக்-டொக் சமூவலைத்தளத்தில் பகிரப்படும் காணொளிகள் மூலம் பிரபலமடைந்த உணவுப்பொருள் ஒன்றுக்கு பிரான்ஸ் தடைவிதித்துள்ளது.
பாண் அல்லது கேக் போன்ற உணவுகள் மீது பூசப்படும் கிரீம் போன்ற பதார்த்தமான "El Mordjene Cebonce" எனும் உணவுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வறுத்த 'ஹஸல்நட்' விதைகள் மூலம் உருவாக்கப்படுவதாக சொல்லப்படும் இந்த உணவு, அல்ஜீரியாவில் இருந்து ஐரோப்பாவின் பல நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
பிரெஞ்சு டிக்-டொக் பிரபலங்களின் கைகளினால் காட்சிப்படுத்தப்பட்டு, பாராட்டப்படும் இந்த உணவு, ஐரோப்பிய உணவு கட்டுப்பாட்டு நிபந்தனைகளுக்குள் இல்லை என குற்றம் சாட்டப்பட்டு பிரான்சில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிக்-டொக் பிரபலங்கள் இனிமேல் இதனை தங்களது காணொளிகளில் விளம்பரப்படுத்தினால் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் இருப்பதாகவும், ஒரு கிலோ எடையுள்ள பொதி €30 யூரோக்கள் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1