Paristamil Navigation Paristamil advert login

கார்கிவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மீது ரஷ்யா  தாக்குதல்! 

கார்கிவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மீது ரஷ்யா  தாக்குதல்! 

17 புரட்டாசி 2024 செவ்வாய் 05:38 | பார்வைகள் : 9968


வடகிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அங்குள்ள பல மாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது ரஷ்யா வெடிகுண்டுகளை வீசியதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், குழந்தைகள் உட்பட 40 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் அந்த கட்டிடத்தின் 9 மற்றும் 12 வது தளங்களுக்கு இடையில் தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர்.


இந்த தாக்குதலுக்கு பின்னர் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவின் ராணுவ விமான தாக்குதல்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்