Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில்  டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில்  டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு

16 புரட்டாசி 2024 திங்கள் 05:46 | பார்வைகள் : 7204


அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய டொனால் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிற நிலையில், புளோரிடா கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்ற போது அங்கு திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. 

இதையடுத்து, அதிகாரிகள் டிரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.


ஏற்கனவே, பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இரு மாதங்களில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட 2வது தாக்குதல் முயற்சி இது என்பதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்