Paristamil Navigation Paristamil advert login

 219 தொழிற்சாலைகளுக்கு பூட்டிய பங்களாதேஷ்- காரணம் என்ன..?

 219 தொழிற்சாலைகளுக்கு பூட்டிய பங்களாதேஷ்- காரணம் என்ன..?

14 புரட்டாசி 2024 சனி 09:42 | பார்வைகள் : 7043


பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலைகள் உட்பட 219 தொழிற்சாலைகளை மூடுவதற்கு பங்களாதேஷ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சில தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றன.

அதேசமயம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் காரணமாக 86 ஆடைத் தொழிற்சாலைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

மேலும் வன்முறைகளைத் தடுப்பதற்காக தொழிற்சாலைகளுக்கு முன்பாக மேலதிக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்