சுவிட்சர்லாந்தில் அழகிய மனைவியை வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்த கணவன்!
14 புரட்டாசி 2024 சனி 08:18 | பார்வைகள் : 6273
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து நாட்டில் நாம் வெலவெலத்து போகும் அளவுக்கு மிகக் கொடூரமான ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது .
மிஸ் சுவிட்சர்லாந்து அழகி போட்டியில் இறுதிச் சுற்று வரை சென்ற கிறிஸ்டினா ஜோக்சிமோவிக் என்பவரே இவ்வாரு கணவனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரைக் கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டிய அவரது கணவர் தாமஸ், உடல் பாகங்களை எல்லாம் கெமிக்கல் மூலம் கரைத்துள்ளார்.
38 வயதான முன்னாள் மாடல் கிறிஸ்டினாவின் உடலின் சில பாகங்கள் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி பாசலுக்கு தென்மேற்கே சுமார் 3 கிமீ தொலைவில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவரது 41 வயது கணவர் தாமஸ் கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தன்னை விடுவிக்க வேண்டும் என்று தாமஸ் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வளவு கொடூரமாகத் தனது மனைவியைக் கொலை செய்த இந்த கொடூரனை விடுவிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
தாமஸ் தனது வாக்குமூலத்தில் மனைவியை கொன்றமை தொடர்பில் விவரித்தமை பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
பின்னர் லான்டரி அறைக்கு (துணி துவைக்கும் மெஷின்கள் இருக்கும் ரூம்) மனைவியின் உடலை இழுத்துச் சென்று அங்கு ஜிக்சா, கத்தி மற்றும் தோட்டத்தில் செடிகளை கட் செய்ய உதவும் கத்திகளைப் பயன்படுத்தி மனைவியின் உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.
கிறிஸ்டினா உடலின் சில பாகங்களை மிக்ஸியில் போட்டும் தாமஸ் அரைத்து சில பாகங்களை கெமிக்கல் போட்டும் கரைத்துள்ளமை நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன.
தற்காப்புக்காகவே தனது மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொன்றதாக தாமஸ் கூறுகிறார். மனைவி கிறிஸ்டினா தன்னை கத்தியால் குத்த வந்ததாகவும் இதன் காரணமாகவே கொலை செய்ய நேர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தாமஸ் மன நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லும் மருத்துவர்கள், கொடூரமான குற்றங்களைச் செய்யும் சாடிஸ்ட் மனநிலை தாமஸுக்கு அதிகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலைக்கு முன்பும் கூட தாமஸ் முன்பே ஒரு முறை தனது மனைவியின் கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்றுள்ளமையும் என்பதும் விசாரணையில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan