விஜயுடன் மீண்டும் இணையும் சிம்ரன்?
10 புரட்டாசி 2024 செவ்வாய் 14:45 | பார்வைகள் : 5239
விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் கடைசியாக நடிக்க உள்ள தளபதி 69 படத்தின் அப்டேட்டுகள் வெளிவர தொடங்கி உள்ளன.
தளபதி 69 படத்தை தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் எச்.வினோத் இயக்க உள்ளார்.எச்.வினோத் தனது சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு, வலிமை படங்களால் கவனம் பெற்றார்.தளபதி 69 படத்தை தயாரிக்கும் நிறுவனம், இடம்பெறும் நடிகர்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் விஜய்யின் கடைசி படமாக அமையும் என்று கூறப்படுவதால் இதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்
அந்த வகையில் தளபதி 69 படத்தில் மலையாள நடிகை நமீதா பைஜூ இடம் பெறுவார் என்று சமீபத்திய தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் முக்கிய கேரக்டரில் நடிகை சிம்ரன் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சிம்ரனிடம் பட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியுள்ளன. இருவரும் இணைந்து நடித்த துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே உள்ளிட்ட படங்களை ரசிகர்களை அதிகம் கவர்ந்தன.
தளபதி 69 படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களாக யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இதற்கிடையே தி கோட் திரைப்படம் வெளியான முதல் 4 நாட்களில் மட்டும் 288 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது.இந்த வாரம் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாக ஓடும் என்பதால் வார இறுதிக்குள் ஒட்டுமொத்த கலெக்ஷன் ரூ. 500 கோடியை தொடலாம் என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan