குவைத் நாட்டின் துணை பிரதமர் பதவி நீக்கம்
9 ஐப்பசி 2024 புதன் 04:54 | பார்வைகள் : 10534
குவைத் நாட்டின் துணைப்பிரதமர் இமாத் அதீகி, அந்நாட்டின் எண்ணெய் வளத்துறை மந்திரி பொறுப்பையும் கவனித்து வந்தார்.
இவரை பதவியில் இருந்து நீக்குவதாக குவைத் மன்னர் மிஷால் அல்-அகமத் அல்-ஜாபர் அல்-சபா அறிவித்துள்ளார்.
இந்த தகவலை குவைத் அரசு நடத்தும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
குவைத் நிதி அமைச்சரும், பொருளாதார விவகார அமைச்சருமான நூரா பசாமுக்கு எண்ணெய் வளத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுவதாகவும் மன்னர் அறிவித்துள்ளார்.
இந்த பதவி நீக்கத்துக்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan