ஈஃபிள் கோபுரத்தில் Gustave Eiffel இன் மனைவிக்கு பதிலாக மகள் இருப்பது ஏன்..?
3 ஆனி 2021 வியாழன் 10:30 | பார்வைகள் : 24950
ஈஃபிள் கோபுரத்தின் உச்சியில் உள்ள அறையில் Gustave Eiffel இற்கு ஒரு சிலை உள்ளதை நீங்கள் பல தடவைகள் பார்த்திருப்பீர்கள். Gustave Eiffel uடன் விஞ்ஞானி தோமஸ் எடிசன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருப்பது போன்றும், அவரை Gustave Eiffel இன் மகள் Claire உபசரிப்பது போன்றும் மெழுகி சிலை அமைக்கப்பட்டுள்ளது.
Gustave Eiffel இன் குடும்பம் சார்பாக அவரது மனைவி உபசரிப்பது போன்று இல்லாமல் ஏன் மகள் Claire உபசரிப்பது போன்று உள்ளது..?

இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்...
Gustave Eiffel தனது 30 ஆவது வயதில் Marguerite Gaudelet என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிகளுக்கு 5 பிள்ளைகள். அதில் மூத்தவர் தான் Claire.
திருமணம் முடித்து 15 வருடங்கள் மாத்திரமே Marguerite Gaudelet உயிர்வாழ்ந்தார். Gustave Eiffel தன் வாழ்க்கையில் மிக ‘பிஸி’யான தருணத்தில் அவரது மனைவியை இழக்க, குடும்பத்தினை பார்ப்பதற்கு ஆள் இல்லாமல் போனது. அந்த பொறுப்பை Claire ஏற்றுக்கொண்டார்.
தனது சகோதர்களை தனது சொந்த பிள்ளைகள் போல், தனது 14 ஆவது வயதில் இருந்தே பார்த்து வந்தார். அத்தோடு தனது தந்தையின் நிறுவனத்தின் “நிர்வாக மேலதிகாரியாகவும்’ Claire பொறுப்பேற்றுக்கொண்டார்.
இப்படி Gustave Eiffel இன் வாழ்க்கையில் மிக முக்கிய இடத்தினை அவரது மனைவியை விட அவரது மகளே பிரதான பாத்திரம் மேற்கொண்டார். இதனாலேயே ஈஃபிள் கோபுரத்தில் அவரது சிலை வடிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan