'ராட்சசன்' பட தயாரிப்பாளர் திடீர் மறைவு..
9 புரட்டாசி 2024 திங்கள் 08:09 | பார்வைகள் : 5071
விஷ்ணு விஷால் நடித்த ’ராட்சசன்’ உட்பட சில வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் டில்லி பாபு திடீரென காலமானதை அடுத்து கோலிவுட் திரை உலகம் அதிர்ச்சியில் உள்ளது.
ஆக்சிஸ் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை டெல்லி பாபு அவர்கள் நடத்தி வந்த நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வித்தியாசமான புதிய திரைக்கதை அம்சம் கொண்ட படங்கள் உருவாகின.
குறிப்பாக இவர் தயாரித்த ’ராட்சசன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான திரில்லர் படமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல்’மரகத நாணயம்’ ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ’ ஓ மை கடவுளே’ ’பேச்சிலர்’ ’கள்வன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இவர் தயாரித்து உள்ளார். மேலும் சில கதைகளை கேட்டு சில இயக்குனர்களிடம் புதிய படங்கள் தயாரிக்க அட்வான்ஸ் பணம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக தயாரிப்பாளர் டில்லி பாபு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் திடீரென இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரை உலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டில்லி பாபு மறைவுக்கு திரையுலகினர் தங்களது இரங்கலை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan