பிரான்சில் ரேடியோ உருவான வரலாறு..!!
13 மாசி 2020 வியாழன் 10:30 | பார்வைகள் : 24126
இன்று உலக வானொலி தினம். பிரான்சில் வானொலி உருவான வரலாறு பற்றி சுருக்கமான சில தகவல்களை இன்றைய பிரெஞ்சு புதினத்தில் அறிந்து கொள்ளலாம்.
ரேடியோவை கண்டுபிடித்தவர் யார்..? மார்கோனி. 1896 ஆம் வருடம் அவர் ரேடியோவை கண்டுபிடித்த கையோடு, அடுத்த வருடமே.. அதாவது 1897 ஆம் வருடமே பிரான்சுக்கு ரேடியோ சேவைகள் ஆரம்பித்து விட்டன..
அட... நிஜம் தான்.
பிரான்சின் முதல் ரேடியோ ஈஃபிள் கோபுரத்தில் வைத்து ஒலிபரப்பு செய்யப்பட்டது. (அப்போது ஈஃபிள் கோபுரத்தை வைத்து என்ன செய்வதென்றே பிரெஞ்சு அரசுக்கு தெரியவில்லையாம். சரி ரேடியோ அண்டனாவா ஆவது இருக்கட்டுமே என விட்டு வைத்திருக்கின்றார்கள்..)
1921 ஆம் ஆண்டு வரை 'இன்று பரிசில் மழை பெய்யும். இன்று சுதந்திர தினம் என்பதால் சோம்ப்ஸ்-எலிசேயில் இராணுவ அணிவகுப்பு இடம்பெறும்' என வானிலை அறிக்கையும் இன்ன பிற தகவல்களையுமே அறிவித்துக்கொண்டு இருந்துள்ளார்கள்.
நவம்பர் 6 ஆம் திகதி, 1922 ஆம் வருடம் பிரான்சில் உத்தியோகபூர்வ முதல் வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டது. வானொலியின் பெயர் Radiola.
இந்த Radiola வானொலி ஆரம்பிக்கப்பட்டு எட்டு நாட்களின் பின்னர் தான் BBC சேவை ஆரம்பிக்கப்பட்டது என்பது ஒரு கொசுறு தகவல்.
1922 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த Radiola வானொலியின் பெயரை 1924 ஆம் ஆண்டு RADIO PARIS என மாற்றினார்கள்.
பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் Radio Toulouse, Radio Lyon, Radio Luxembourg என பிராந்திய சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
இரண்டாம் உலகப்போர் ஆரம்பிக்கப்பட்டபோது, பிரான்சில் 14 வணிக வானொலிகளும் 12 பொதுத்துறை வானொலிகளும் இருந்தன.
அதன் பின்னர் ரேடியோக்கள் அனைத்தும் அசுர வளர்ச்சி அடைத்து, புதிது புதிதாக முளைத்தன..
2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் Radio France வானொலி தனது AM சேவையை நிறுத்தி, முழுக்க முழுக்க FM சேவையினை மாத்திரமே வழங்கி வருகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan