தாமரை கோபுரத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி - பெற்றோர் வழங்கிய வாக்குமூலம்!
9 ஐப்பசி 2024 புதன் 15:39 | பார்வைகள் : 5325
கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி, ஏற்கனவே உளவியல் ஆலோசனையைப் பெற்று வந்துள்ளதாக அவரது பெற்றோர் காவல்துறையில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
குறித்த மாணவியின் நெருங்கிய நண்பியும், நண்பரும் கொம்பனித் தெருவில் உள்ள தொடர்மாடிக் கட்டிடம் ஒன்றிலிருந்து வீழ்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்தனர்.
அவர்களின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாததுள்ளதாகத் தெரிவித்து, கடுமையான மன உளைச்சளுக்கு உள்ளாகியிருந்ததாகக் கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவியின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், வகுப்பறையில் தனிமையிலிருந்து வந்த நிலையில், அவரது கல்விக்குத் தடை ஏற்பட்டிருந்தது.
உயிரிழந்த மாணவி, தமது குடும்ப அங்கத்தவர்களுடனான தொடர்பையும் குறைத்ததுடன், உணவு உண்பதையும் தவிர்த்து வந்ததாக அவரது பெற்றோர் காவல்துறை வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், மாணவியின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் இடம்பெற்றது.
இதேவேளை, கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக கல்வி அமைச்சு ஐவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan