Paristamil Navigation Paristamil advert login

புளோரிடா மாகாணத்தை தாக்கும் மில்டன் புயல்

புளோரிடா மாகாணத்தை தாக்கும் மில்டன் புயல்

9 ஐப்பசி 2024 புதன் 15:24 | பார்வைகள் : 5498


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயல் கரையைக் கடக்கும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்சிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் அதி தீவிர புயல் உருவானது.

மில்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கரையை கடக்க உள்ளது.

அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழையும் பெய்யும். அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். டாம்பா வளைகுடா பகுதியில் புயல் கரையைக் கடக்கும் போது 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டாம்பா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26 ஆம் திகதியும் ஹெலீன் புயல் தாக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்