■ வெள்ளம் : Seine-et-Marne மாவட்டத்துக்கு 'சிவப்பு' எச்சரிக்கை!

9 ஐப்பசி 2024 புதன் 14:16 | பார்வைகள் : 6851
ஒக்டோபர் 9, இன்று புதன்கிழமை மாலை 4 மணி முதல் Seine-et-Marne மாவட்டத்துக்கு வெள்ள அனர்த்தம் காரணமாக 'சிவப்பு' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், வீதி போக்குவரத்து பல இடங்களில் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Grand Morin ஆற்றின் நீர்மட்டம் 2.10 மீற்றர் உயரத்தை எட்டியுள்ளதாகவும், நாளை வியாழக்கிழமை காலைக்குள் இந்த நீர்மட்டம் 4.50 மீற்றரை தாண்டிவிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டத்துக்கு அதிகபட்ச எச்சரிக்கையான 'rouge' (சிவப்பு நிற எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1