கொல்லப்பட்ட பெண்ணின் புகைப்படம் AI character ஆக உருவாக்கம்
9 ஐப்பசி 2024 புதன் 10:34 | பார்வைகள் : 4619
அமெரிக்காவில் 18 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட பெண்ணின் புகைப்படம் AI character ஆக உருவாக்கப்பட்டதைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
Drew Crecente என்பவரின் மகள் Jennifer Ann கடந்த 2006ஆம் ஆண்டில் தனது முன்னாள் காதலரால் கொலை செய்யப்பட்டார்.
தனது மகளின் நினைவாக Drew இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் Character.AI நிறுவனத்தின் செயல் Jenniferயின் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது, Jenniferயின் புகைப்படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி Chatbotஐ Character.AI நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இதன்மூலம் பொதுமக்களுக்கு தேவையான Customer Care வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 69 உரையாடல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
இதனால் இதுபோன்று ஒருவரின் தனிப்பட்ட விடயங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், அதனை நீக்க வேண்டும் என்றும் Drew கோரிக்கை வைத்தார்.
மேலும், Jenniferயின் சித்தப்பா பிரைன் சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பாக பதிவிட, அவருக்கு ஆதரவு பெருகியது. அதனைத் தொடர்ந்து Jennifer Annயின் Chatbotஐ நீக்கியது Character.AI நிறுவனம்.
தனிமனித விடயங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan