பரிஸ் : மின்சார ஸ்கூட்டர் விபத்து.. இருவர் காயம்.. ஒருவர் கவலைக்கிடம்...!

1 ஐப்பசி 2024 செவ்வாய் 15:11 | பார்வைகள் : 15366
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று செப்டம்பர் 30 ஆம் திகதி இரவு 10.45 மணி அளவில் Boulevard Mortier பகுதியில் ஸ்கூட்டர் ஒன்றில் (trottinette) பயணித்த 23 மற்றும் 34 வயதுடைய இருவரே விபத்துக்குள்ளாகினர். நடைமேடையில் வேகமாக பயணித்த இருவரும், சிமெந்து கட்டு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
அவர்கள் இருவரும் Lariboisière மருத்துவமனையில் (10 ஆம் வட்டாரம்) அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிருக்காபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1