பிரித்தானியாவில் 8 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு
29 புரட்டாசி 2024 ஞாயிறு 16:07 | பார்வைகள் : 6931
பிரித்தானியாவில் 8 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கி சூடு காயங்களால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை, செப்டம்பர் 29 ஆம் திகதி வார்கோப்(Warcop) பகுதியில் உள்ள பண்ணையில் ஒன்றில் 8 வயது சிறுவன் துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
கும்பிரியா காவல்துறைக்கு, துப்பாக்கியால் 8 வயது குழந்தை பலத்த காயமடைந்ததாக கிடைத்த புகாரையடுத்து, பிற்பகல் 2:50 மணிக்கு சம்பவ இடத்திற்கு பொலிஸார், அவசர சேவைப் பணியாளர்கள், வடமேற்கு ஆம்புலன்ஸ் சேவையினர் விரைந்தனர்.
அங்கு சிறுவன் தலையிலும் முகத்திலும் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் போராடி கொண்டிருந்த நிலையில் உடனடியாக விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவர்களின் சிறந்த முயற்சிகளுக்கு பிறகும் சிறுவன் தன்னுடைய காயங்கள் காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் சந்தேகத்திற்கிடமான 60 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பத்தில் தீவிர உடல் காயம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அவர், தற்போது குற்றமற்ற கொலை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கும்பிரியா காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan