சவுதி அரேபிய அரசுக்கு எதிரான விமர்சனம் - ஆசிரியருக்கு சிறை தண்டனை
26 புரட்டாசி 2024 வியாழன் 09:51 | பார்வைகள் : 8030
சவுதி அரேபிய அரசுக்கு எதிராக கருத்து சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
சவுதி அரேபிய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சவுதி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
முகமது அல் காம்தி என்பவர் சவுதி அரேபியாவில் ஓய்வுபெற்ற ஆசிரியர் அரசுக்கு எதிராக x தளப்பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
இதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு ஜூலை 2023-ம் ஆண்டு அவருக்கு சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
அதனை விசாரித்த கோர்ட், கடந்த ஒகஸ்ட் மாதம், மரண தண்டனையை ரத்து செய்ததது.
ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, இணையத்தில் இதே போன்ற விமர்சனங்களுக்காக காம்தியின் சகோதரர் ஆசாத் அல்-காம்டிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசாத்தின் தண்டனை மறுபரிசீலனை செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan