முகம் தெரியாத இராணுவத்தினர் - யார் இவர்கள்? இவர்களின் வேலை என்ன?
21 ஆடி 2020 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 22628
1992ம் ஆண்டு...!! பிரான்சின் தரைப்படை, கடல்படை, வான்படை மூன்றிலும் இருந்து சில பல இராணுவவீரர்கள் காணாமல் போயினர். எங்கே போனார்கள்? ஏன் போனார்கள்? என்று யாருக்குமே தெரியாது. ஒருவேளை வேலையில் இருந்து ஓய்வு பெற்று வீட்டுக்குப் போய்விட்டார்களோ? என்று அவர்களது சகாக்கள் நினைத்தனர்.
ஆனால் அவர்கள் காணாமல் போகவில்லை. உரு மாறினார்கள். வழக்கமான சீருடையில் இருந்து வேறு ஒன்றுக்கு மாறினார்கள். முகத்தை மூடி கவசம் போட்டார்கள். வேறு யாரும் எடுக்காத, கடினமான பயிற்சிகள் அவர்கள் எடுத்தார்கள். அதி நவீன ஆயுதங்கள் அவர்களின் கைகளில் தரப்பட்டன. நவீன தொடர்பு சாதனங்கள், தொழில்நுட்பக் கருவிகள் அவர்களது தோள்களிலும் மார்பிலும் முதுகிலும் ஏறிக்கொண்டன.
ஆம், புதிய அதிரடி இரகசியப் படைப்பிரிவாக அவர்கள் தோற்றம் பெற்றார்கள். அவர்களின் வேலை அதிரடித் தாக்குதல் நடத்துவது, ஊடுருவுவது, ஆட்களைக் கடத்துவது, தேவைப்பட்டால் ‘போட்டுத் தள்ளுவது’ என்று எல்லாமே அதிரடிதான்.
நாள் ஒன்றில் 24 மணிநேரமும் இவர்கள் தயார்நிலையில் இருப்பார்கள். எங்கு தாக்க வேண்டும் என்று கட்டளை வருகிறதோ, அந்த இடத்துக்கு சீறிப் பாய்வார்கள்.

இவர்களின் பெயர் COS ஆகும். ( அதாவது Commandement des Opérations Spéciales ) தமிழில் ‘விஷேட நடவடிக்கைப் பிரிவு’ என்று சொல்லலாம்.
3,746 பேர் இந்தப் பிரிவில் உள்ளார்கள். அவர்களில் 307 பேர் பின்கள ஊழியர்கள். ஏனைய 3,439 பேரும் அதிரடி சரவெடி இரும்பு மனிதர்கள்.
பரிசிலே Balard எனும் இடத்தில் இவர்களின் தலைமையகம் உள்ளது. அங்கிருந்துகொண்டு ‘உலகம் முழுவதையும்’ தமது கழுகுக் கண்களால் அவதானித்துக்கொண்டே இருப்பார்கள்.
பிரான்சின் பிரபல புலனாய்வு அமைப்பாகிய DGSE உடன் இணைந்து இவர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் புள்ளி வைப்பார்கள். இவர்கள் கோலம் போடுவார்கள்.
இந்தப் படைப்பிரிவின் அதிரடி ஆட்டங்கள் திகில் நிறைந்தவை. பயங்கரமானவை. அவற்றை இன்னொரு புதினத்தில் பார்க்கலாம். இந்த கழுகு வீரர்களின் நோக்கம், சிந்தனை, கொள்கை எல்லாமே ஒன்றே ஒன்றுதான்.
‘பிரான்சை பாதுகாப்பது’
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan