Sevran : துப்பாக்கிச்சூட்டில் 18 வயது இளைஞன் காயம்!

24 புரட்டாசி 2024 செவ்வாய் 10:40 | பார்வைகள் : 6926
நேற்று செப்டம்பர் 23, திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துபபக்கிச்சூட்டு சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞன் காயமடைந்துள்ளார்.
Sevran (Seine-Saint-Denis) நகரில் இரவு 11.40 மணி அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் நெடுஞ்சாலை ஒன்றில் அருகே நின்றிருந்ததாகவும், மகிழுந்து ஒன்றில் வந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
சரமாரியாக துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், 19 ரவைகளை சம்பவ இடத்தில் இருந்து மீட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1