Paristamil Navigation Paristamil advert login

ஜெயம் ரவி விவகாரம் தொடர்பில் மனம் திறந்த பாடகி கெனிஷா..!

ஜெயம் ரவி விவகாரம் தொடர்பில் மனம் திறந்த பாடகி கெனிஷா..!

22 புரட்டாசி 2024 ஞாயிறு 11:29 | பார்வைகள் : 5350


நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் பிரிவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷாவுக்கு தொடர்பு இருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் கிளம்பி வருகிறது.

இந்த வதந்திகளுக்கு ஏற்கனவே ஜெயம் ரவி விளக்கம் அளித்த நிலையில் தற்போது முதல் முறையாக பாடகி கெனிஷா தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

ஜெயம் ரவியிடம் நாகரீகம் இல்லாமல் சில கேள்விகளை கேட்டு உள்ளீர்கள், இப்போது ஜெயம் ரவி அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இனிமேலாவது உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் மனதில் இருக்கும் காயத்திற்கு எதிரி வேறு யாரும் இல்லை, நீங்களே தான்’ என்று ஆர்த்திக்கு மறைமுகமாக பதில் அளித்துள்ளார்.

மேலும் உண்மை தெரியாமல் தேவையில்லாமல் கற்பனைகளில் மிதந்து மற்றவர்களின் வாழ்க்கையில் பாதிக்க உண்டாக்க வேண்டாம். அவரவர் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ விடுங்கள். தயவுசெய்து கருணையுடன் இருங்கள்! உண்மையை அறியாமல் யாரையும் குற்றம் சாட்ட வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்