பரிஸ் : வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!
14 ஆவணி 2024 புதன் 14:42 | பார்வைகள் : 13896
பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பெண் தாக்குதலுக்கு இலக்காகி அடித்துக்கொல்லப்பட்டதாக அறிய முடிகிறது.
ஓகஸ்ட் 13, செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் Rue de la Présentation வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்றது. காவல்துறையினர் அழைக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு அவர்கள் வந்தடைந்த போது, இரத்தம் உறைந்த நிலையில் குறித்த பெண் சடலமாக கிடப்பதை பார்த்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. அப்பெண் ஒரு பாலியல் தொழிலாளி எனவும், வாடிக்கையாளர் ஒருவர் இந்த கொலையினை மேற்கொண்டிருக்கலாம் எனவும் முதற்கட்டமாக சந்தேகிக்கப்படுகிறது.
திருப்பிலி (tournevis) மூலம் அப்பெண் குத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்ததாக தடயவியல் குழுவினர் தெரிவித்தனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan