செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் தேக்கம் இருப்பது கண்டுபிடிப்பு
14 ஆவணி 2024 புதன் 08:43 | பார்வைகள் : 5367
செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள நிலத்தடி பாறைகளில் கடலுக்கு நிகரான நீர் கொள்ளளவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2018 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடையில் செவ்வாய்க் கிரகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நாசாவின் இன்சைட் லேண்டர் (Mars Insight Lander) என்ற ரோபோ பதிவு செய்திருந்த நில அதிர்வு அளவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேஷனல் ஜேர்னல் கடந்த திங்கட்கிழமையன்று 12வெளியிட்ட ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில், பாறை கிரகங்களின் பரிணாம வளர்ச்சியை ஆராயும் நோக்கத்துடன் ரோபோ இன்சைட் லேண்டர் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது.
நில அதிர்வுகளைக் கண்டறியும் அளவீட்டைக் கொண்டுள்ள இந்த ரோபோ மூலம் செவ்வாய்க் கிரகத்தில் 1,319க்கும் மேற்பட்ட பூகம்பங்களின் தரவுகளைச் சேகரிக்க முடிந்தது. அந்த நிலநடுக்கங்களுக்கு MARSQUAKE என்று பெயரிடப்பட்டுள்ளது.
2022 இல் முடிவடைந்த “இன்சைட் மிஷன்“ அதன் தரவுகளைப் பகுப்பாய்வு செய்தபிறகு, செவ்வாய்க் கிரகத்தின் உட்புறத்தில் கடலின் கொள்ளளவு கொண்ட நீர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து 10 முதல் 20 கி.மீ ஆழத்தில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிரகத்தின் துருவங்களுக்கு அருகில் வளிமண்டலத்தில் பனி மற்றும் நீராவி இருப்பதற்கான சான்றுகள் உள்ளன.
ஆனால் அங்குத் திரவ நீர் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். எவ்வாறாயினும், சுமார் 3 பில்லியன் வருடங்களாகப் பாலைவனமாக மாறியுள்ள செவ்வாய்க் கிரகத்தில் உள்ள நீருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan