இந்திய டி20 ஸ்பெஷலிஸ்ட்டுக்கு திருமண நிச்சயம் - சக கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து

11 ஆவணி 2024 ஞாயிறு 09:07 | பார்வைகள் : 3985
இந்திய கிரிக்கெட் வீரர் ஜிதேஷ் ஷர்மாவிக்ரு திருமண நிச்சயம் இன்று நடந்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா (Jitesh Sharma) சமீபத்தில் ஷலகா மேகேஷ்வாருடன் (Shalaka Makeshwar) நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
ஜிதேஷ் ஷர்மா (30) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் இதை அறிவித்தார்.
இந்த நிச்சயதார்த்த புகைப்படங்களில் ஜிதேஷ் கருப்பு பேன்ட்ஸ் மற்றும் சாம்பல் நிற சட்டையில் இருந்தார், ஷலகா பாரம்பரிய பட்டுப்புடவை அணிந்திருந்தார். இந்த ஜோடி மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிகழ்வுக்காக பல முக்கிய கிரிக்கெட் வீரர்கள், ஜிதேஷுக்கும் ஷலகாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்தியாவின் புதிய T20I கேப்டன் சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் காய்க்வாட், மற்றும் சிவம் துபே உள்ளிட்டோர் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளை பகிர்ந்தனர்.
ஷலகா மேகேஷ்வார் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் என்ஜினீயரிங்கில் BE படித்தவர் மற்றும் நாக்பூரில் Advent Software Pvt. Ltd-ல் Software Engineer-ஆக பணியாற்றுகிறார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1