குழு மோதலில் இளைஞன் படுகொலை
3 புரட்டாசி 2023 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 19005
குழு மோதல் ஒன்றில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். இச்சம்பவம் பிரான்சின் தென்கிழக்கு பிராந்தியமான Châtellerault (Vienne) இல் இடம்பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 11 மணி அளவில் Plaine d’Ozon பகுதியில் ஒன்று கூடிய இளைஞர்கள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் கத்தியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளான். சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டபோது நிலமை கைமீறிச் சென்றிருந்ததாகவும், குறித்த இளைஞனைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ள போதும், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan