வளர்ப்பு பிராணிகள் திருட்டு அண்மைக்காலமாக Franceசில் 20% சதவீதம் அதிகரிப்பு.

2 புரட்டாசி 2023 சனி 19:27 | பார்வைகள் : 16544
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் France சில் வளர்ப்பு பிராணிகள் திருடப்படுவது 20% சதவீதத்தால் அதிகரித்து இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே உரிமையாளர்கள் அவதானமாக இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வளர்ப்பு பிராணிகளில் சிறப்பாக வளர்ப்பு நாய்களே அதிகம் திருடப்படுவதாக தெரிவிக்கும் காவல்துறையினர்; 2021ம் ஆண்டு 378 வளர்ப்பு நாய்களும், 2022ம் ஆண்டு 459 வளர்ப்பு நாய்களும் திருடப்பட்டாதாக வழக்குகள் பதிவாகியுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.
திருடப்படும் அத்தகைய வளர்ப்பு நாய்கள் அதன் தரத்திற்கு ஏற்ப இணையத்தளங்களில் 4000€ வரை விற்பனை செய்யப்படுகிறது எனவும், சில வளர்ப்பு நாய்கள் இனப்பெருக்கம் செய்யப் பயன்படுகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே உரிமையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1