பிரெஞ்சு வாகன இலக்கத்தகடு! - நீங்கள் அறிந்திராத ஆச்சரிய தகவல்கள்!
6 கார்த்திகை 2021 சனி 15:40 | பார்வைகள் : 28261
இன்றைய பிரெஞ்சு புதினத்தில், பிரான்சில் பயன்படுத்தப்படும் வாகன இலக்கத்தகடு (SIV) குறித்த சில ஆச்சரியமான தகவல்களை பார்க்கலாம்.
உங்களுக்கு தெரியுமா… வாகன இலக்கத்தகட்டினை முதல் முதலாக பயன்படுத்திய நாடு பிரான்ஸ். 1749 ஆண்டில் இருந்து என்கிறது விக்கிப்பீடியா.
ஆனால் 1901 ஆம் ஆண்டில் இருந்து தான் வாகங்களில் இந்த இலக்கத்தகடுகள் பொருத்தியிருக்கவேண்டும் எனும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.
‘système d'immatriculation des véhicules’ என அழைக்கப்படும் இந்த இலக்கத்தகடு 520 மில்லிமீற்றர் நீளமும், 110 மில்லிமீற்றர் அகலமும் கொண்டது. தற்போது நடைமுறையில் உள்ள புதிய விபரங்கள் அடங்கிய தகடு 2009 அம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
AA-111-AA எனும் வடிவில் இலக்கங்களையும் எழுத்துக்களையும் கொண்டது.
இலக்கத்தகட்டின் வலது பக்கத்தில் ஐரோப்பிய ஒன்றிய இலட்சிணையும், அதன் கீழ் பிரான்சை குறிக்கும் F எனும் எழுத்தும், இடது பக்கத்தில் மாகாணத்தை குறிக்கும் இலட்சணையும், அதன் கீழ் மாவட்டத்தின் இலக்கமும் (உதாரணம் பரிஸ் என்றால் 75) அச்சிடப்பட்டிருக்கும்.

ஒரு இலக்கத்தகடு கறுப்பு நிற பின்னணியில் வெள்ளை நிற எழுத்துக்களுடன் இருந்தால் அந்த வாகன ‘க்ளாஸிக்’ வகை மகிழுந்துகளை குறிக்கும்.
அதுவே சிவப்பு நிறத்தில், வெள்ளை எழுத்துக்களுடன் இருந்தால் அது தற்காலிக இலக்கத்தகடு என அர்த்தமாகும். (அதன் இடது பக்கத்தில் காலாவதியாகும் ஆண்டு, மாதம் அச்சிடப்பட்டிருக்கும்)
இலக்கத்தகட்டில் உள்ள எழுத்துக்களில் I, O, U ஆகிய மூன்று எழுத்துக்கள் பயன்படுத்துவதில்லை. காரணம் I O U போன்ற எழுத்துக்கள் 1, 0, V போன்று தெரியும் என்பதால் அவை பயன்படுத்தப்படுவதில்லை.
அதேபோல் SS எனும் அடுத்தடுத்த எழுத்துக்களையும் பயன்படுத்துவதில்லை. நாசி அமைப்பினை ஞாபகப்படுத்தும் என்பதால் இந்த எழுத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன.
முன்பக்கத்தின் பொருத்தப்படும் இலக்கத்தகடும் ஒளி பிரதிபலிக்கும் தன்மை கொண்டதாகவும், பின் பக்கத்தில் பொருதப்படும் தகடுகள் ஒளி பிரதிபலிக்காத தன்மை கொண்டதாகவும் வடிவமைக்கப்படுகின்றது.
ஆச்சரியமா இருக்குல்ல..?
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan