102 வயதில் 2000 மீட்டர் உயரத்தில் ஸ்கை டைவிங் செய்து அசத்திய பிரித்தானிய மூதாட்டி!
27 ஆவணி 2024 செவ்வாய் 05:59 | பார்வைகள் : 7349
பிரித்தானியாவை சேர்ந்த 102 வயதான மூதாட்டி பிறந்த நாள் அன்று 2,100 மீட்டர் உயரத்தில் வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து அசத்தியுள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த 102 வயதான மெனட்டே பெய்லி என்ற மூதாட்டியே இவ்வாறு ஸ்கை டைவிங் செய்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
102 வயதான இவர், இளம் வயதினர் போல சாகசம் செய்து அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தனது பிறந்தநாளில் இந்த சாகசத்தினை நிகழ்த்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மூதாட்டி, ஸ்கை டைவிங் செய்யும் போது கண்களை இறுக மூடிக்கொண்டேன். எனது செயல் வயதானவர்களைச் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும் என நம்புகிறேன்.
நான் சுறுசுறுப்பாக செயல்படுவதற்குக் காரணம் என்ன என்று மக்கள் அடிக்கடி கேட்கின்றனர்.
நிச்சயமாக இது அதிர்ஷ்டம். நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan