Châtillon : மகிழுந்துக்குள் எரிந்த நிலையில் சடலம் மீட்பு!!

22 ஆவணி 2024 வியாழன் 16:45 | பார்வைகள் : 11154
மகிழுந்து ஒன்றுக்குள் ஆண் ஒருவரது சடலம் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. Châtillon (Hauts-de-Seine) நகரில் இச்சடலம் நேற்று ஓகஸ்ட் 21, புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள Rue de Malakoff மற்றும் Rue Jean-Bouin வீதிகள் இணைக்கு சந்தி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழுந்து ஒன்றில் ஆண் ஒருவரது சடலம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.
மகிழுந்தின் பின் இருக்கையில், பாதி எரிந்த நிலையில் இந்த சடலம் இருந்ததாகவும், வேறு சில தழும்புகளும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10.45 மணிக்கு சடலம் மீட்கப்பட்டது. உடற்கூறு பரிசோதனைக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் Val-d'Oise மாவட்டத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1