பரிஸ் : வீட்டில் இருந்துகொண்டு வீதியில் சென்ற வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு.. ஒருவர் கைது..!
22 ஆவணி 2024 வியாழன் 20:00 | பார்வைகள் : 16935
வீட்டின் மாடியில் இருந்து வீதியில் சென்ற வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்று ஓகஸ்ட் 21, புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இரவு 8 மணி அளவில் காவல்துறையினர் எச்சரிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். பல்வேறு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாக பலர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளில் அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் MR73 ரக கைத்துப்பாக்கியும், Glock தானியங்கி பிஸ்டல் வகை துப்பாக்கியும் இருந்ததாகவும், அவரே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் அதிஷ்ட்டவசமாக எவரும் காயமடையவில்லை. கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan