விமான விபத்தில் பலியான இரு விமானிகளுக்கு இன்று அரச மரியாதையுடன் கூடிய அஞ்சலி..!
22 ஆவணி 2024 வியாழன் 19:00 | பார்வைகள் : 8349
கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி பலியாகியிருந்த இரு பிரெஞ்சு இராணுவ விமானிகளுக்கு இன்று ஓகஸ்ட் 22 ஆம் திகதி வியாழக்கிழமை அரச மரியாதையுடன் கூடிய அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இராணுவ அமைச்சர் மற்றும் பலியான வீரர்களின் நெருக்கமான குடும்பத்தின மட்டுமே பங்கேற்ற இந்த இந்த நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றிருந்தது. இம்மாதம் 15 ஆம் திகதி நாடு திரும்பிக்கொண்டிருந்த இரு ரஃபேல் விமானங்கள் Meurthe-et-Moselle நகரில் வைத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு இராணுவ விமானிகளும் பலியாகியிருந்தனர்.
அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வே இன்று Landes மாவட்டத்தில் உள்ள Mont-de-Marsan விமான தளத்தில் இன்று இடம்பெற்றது. பிரெஞ்சு இராணுவ அமைச்சர் Sébastien Lecornu இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan