மாணவர்களுக்கு விரைவில் பாடசாலைச் சீருடை.. அமைச்சர் Gabriel Attal
4 புரட்டாசி 2023 திங்கள் 09:10 | பார்வைகள் : 14822
2023 - 2024ம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு; புதிய கல்வி அமைச்சரோடு இன்று (04/09) ஆரம்பமாகியது. நாடுமுழுவதும் 12 மில்லியன் மாணவர்கள் விடுமுறையை முடித்துக் கொண்டு இன்று பாடசாலைகளுக்கு திரும்பியுள்ளனர்.
ஆரம்பிக்கும் போதே மூவாயிரத்து நூற்றுக்கும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறையுடனே பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில் கல்வி அமைச்சர் Gabriel Attal இன்று காலை. RTL வனொலிச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் 'விரைவில் மாணவர்களுக்கு பாடசாலைச் சீருடை அணியும் முறையை பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக' தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த வாரம் இஸ்லாமிய மாணவர்கள் அணியும் உடலை மறைக்கும் அந்த நீண்ட பாரம்பரிய உடைக்கு,
"மாணவர்கள் பாடசாலை வருவது கற்பதற்கு அங்கு ஏன் மத அடையாளங்கள்?" எனக்கூறி தடைவிதிப்பதாக அறிவித்த கல்வி அமைச்சரின் செயல்பாட்டையும், அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் Emmanuel Macron அந்த அறிவித்தலை உறுதிப்படுத்தி வெளியிட்ட செய்தியையும் ஊடகங்கள் விவாதப் பொருளாக்கி விவாதித்து வருவதும், இஸ்லாமிய மதத்தவர்களுக்கிடையே அந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு நிலவிவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan