பரிஸ் : 83 வயது பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!
17 ஆவணி 2024 சனி 13:50 | பார்வைகள் : 18877
83 வயதுடைய பெண் ஒருவர் தாக்கப்பட்டு, அவர் அணிந்திருந்த சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணி அளவில் 14 ஆம் வட்டாரத்தின் Rue de Gergovie விதியில் இச்சம்பவம் இடம்பெற்றது. பெண் ஒருவர் Moulin-de-la-Vierge பூங்காவுக்கு அருகே நடந்து சென்ற நிலையில், அவரை பின் தொடர்ந்து சென்ற இருவர், அப்பெண்ணை இருள் சூழ்ந்த பகுதி ஒன்றில் வைத்து தாக்கியுள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
காவல்துறையினருக்கு எச்சரிக்கப்பட்டு, குறித்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கழுத்தில் காயம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan