Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : கடை ஒன்றில் கொள்ளை.. ஆயுததாரி தப்பி ஓட்டம்!

பரிஸ் : கடை ஒன்றில் கொள்ளை.. ஆயுததாரி தப்பி ஓட்டம்!

17 ஆவணி 2024 சனி 11:15 | பார்வைகள் : 8510


பரிசில் உள்ள கடை ஒன்று ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

rue Alphonse-Daudet வீதியில் உள்ள ஆண்களுக்கான மசாஜ் நிலையம் ஒன்றில் மாலை 4 மணி அளவில் உள் நுழைந்த ஆயுததாரி ஒருவன், அங்கிருந்த இரு ஊழியர்களை மிரட்டி ஆயுதமுனையில் கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளான். 

சில நூறு யூரோக்களை பணப்பெட்டியில் இருந்து அள்ளிக்கொண்டு தப்பிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 58 வயதுடைய பெண் ஒருவரும், வயது குறிப்பிடப்படாத பெண் ஒருவரும் சம்பவத்தின் போது அங்கு இருந்ததாக அறிய முடிகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்