யாழில் தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் பலி

4 புரட்டாசி 2023 திங்கள் 03:04 | பார்வைகள் : 9453
சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி முன்பாக உள்ள தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுபாட்டை இழந்து மோதியதில் இளைஞன் ஒருவர் தலத்திலேயே நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சண்டிலிப்பாய் பகுதியில் இருந்து சில்வாவை நோக்கி பயணித்த பத்மநாதன் வசீகரன் வயது 20 எனும் வடக்கினை சேர்ந்த இளைஞன் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதாது மோட்டார் சைக்கிளை திருப்பிய நிலையில் முன்னிருந்த தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதி தலத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளின் ஒரு பகுதி முழுமையாக சேதமடைந்த நிலையில் பொலிஸார் உடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1