புதிய அரசாங்கம் : பாராளுமன்ற குழு தலைவர்கள் மற்றும் கட்சி தலைவர்களை அழைக்கும் மக்ரோன்..!

16 ஆவணி 2024 வெள்ளி 13:58 | பார்வைகள் : 13119
பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்ற நிலையில், புதிய அரசாங்கம் அமைக்கும் பணி எப்போது என்பது தொடர்பில் பலத்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வரும் ஓகஸ்ட் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற குழு தலைவர்கள் மற்றும் கட்சி தலைவர்களை சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அழைத்துள்ளார். எலிசேமாளிகையில் இடம்பெற உள்ள இந்த சந்திப்பில் புதிய அரசாங்கம் மற்றும் புதிய பிரதமரை தேர்தெடுப்பது தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக அறிய முடிகிறது.
பிரதமர் கப்ரியல் அத்தால் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிற நிலையில், புதிய பிரதமர் எந்த கட்சிக் கூட்டணியில் இருந்து நியமிக்கப்படுவார் என்பது பலரது கேள்வியாக மாறியுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1