Paristamil Navigation Paristamil advert login

விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்..!!

விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்..!!

8 ஆடி 2024 திங்கள் 19:51 | பார்வைகள் : 8700


ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பரிஸ் விமான நிலையங்களுக்கான சபையான ADP இற்கு கீழ் இயங்கும் சாள்-து-கோல் மற்றும் ஓர்லி போன்ற விமானநிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களே வேலை நிறுதத்தில் ஈடுபட உள்ளனர். ஜூலை 17 ஆம் திகதி புதன்கிழமை இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளின் போது விமான நிலையங்கள் மிகவும் நெருக்கடியாக இருக்கும் எனவும், அதன்போது ஊக்கத்தொகை வழங்கப்படவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

CGT, CFDT, FO, UNSA போன்ற தொழிற்சங்க ஊழியர்களே பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்