இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு - பிரபல கோடீஸ்வரர் உட்பட இருவர் மரணம் - பலர் காயம்

8 ஆடி 2024 திங்கள் 11:35 | பார்வைகள் : 12282
அத்துருகிரிய பகுதியில் இன்று (08) முற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றமொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பிரபல பாடகி உள்ளிட்ட 4 பேர் ஹோமாகம வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதுருகிரிய நகரில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில் உள்ள அழகு நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின் போதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரிகள் பயணித்ததாக கூறப்படும் வாகனம் அருகில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1