இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை நாளை!

6 ஆடி 2024 சனி 14:20 | பார்வைகள் : 6383
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை நாளை திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.
மறைந்த இரா.சம்பந்தனின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக நேற்று முதல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அன்னாரின் பூதவுடலுக்கு இன்றும் பொதுமக்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதன்போது, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள சண்முகம் குகதாசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், எஸ். சிறீதரன், இம்ரான் மஹ்ரூப் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1