ஈரான் ஜனாதிபதி தேர்தலில் பழமைவாத வேட்பாளரை தோற்கடித்த மசூத் பெசெஷ்கியன்

6 ஆடி 2024 சனி 09:23 | பார்வைகள் : 10186
ஈரான் ஜனாதிபதி தேர்தலில் பழமைவாத வேட்பாளரை தோற்கடித்து, சீர்திருத்தவாதி மசூத் பெசெஷ்கியன் வெற்றிபெற்றுள்ளார்.
தேர்தலின் இரண்டாம் சுற்றின் முடிவில் வாக்குகள் எண்ணபட்டுள்ள நிலையில்மசூத் பெசெஷ்கியானிற்கு 53வீத வாக்குகள் கிடைத்துள்ளன.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தீவிரபழமைவாதியான சயீட் ஜலீலிற்கு 44 வீத வாக்குகள் கிடைத்துள்ளன.
ஜூன் 28 ம் திகதி தேர்தலில் இரு வேட்பாளர்களும் 50 வீத வாக்குகளை பெறாததை தொடர்ந்து இரண்டாம் சுற்று அவசியமாகியது.
இந்நிலையில் ஈரான் தலைநகரிலும் ஏனைய நகரங்களிலும் புதிய ஜனாதிபதியின் ஆதரவாளாகள் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய ஜனாதிபதி தனது தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திய பச்சை கொடியுடன் இளைஞர்கள் வெற்றியை கொண்டாடுகின்றனர்.
அதேவேளை இருதய சத்திரசிகிச்சை நிபுணரான புதிய ஜனாதிபதி ஈரானின் ஒழுக்ககாவலர்களை கடுமையாக விமர்சித்தவர்.
அதோடு ஈரானில் ஒற்றுமையை நிலைநாட்டுவேன் சர்வதேச சமூகத்திலிருந்து ஈரான் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையை மாற்றுவேன் என அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதிவழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1