காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித்தாக்குதல்

3 ஆடி 2024 புதன் 09:23 | பார்வைகள் : 6177
காசா நகரின் அல்-ஜலா தெருவை நோக்கி இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் காசா பகுதிக்கு தெற்கே உள்ள கிழக்கு கான் யூனிசில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சாய் அட்ரே தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கான் யூனிசின் கிழக்கே உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களை உடனடியாக மனிதாபிமான மண்டலத்திற்கு வெளியேற்றுமாறு வலியுறுத்தினார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1