தென் கொரியாவில் கோர விபத்து ... 9 பேர் பலி

2 ஆடி 2024 செவ்வாய் 01:36 | பார்வைகள் : 6390
தென் கொரிய தலைநகரான சியோலில் மக்கள் மீது கார் மோதியதில் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் 01-07-2024 திகதி இரவு 09.30 அளவில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதசாரி கடவையில் பயணித்தவர்கள் மீது கார் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவ இடத்தில் அறுவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதன் போது, மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சியோல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1