RER B தண்டவாளத்தில் குதித்த காவல்துறை வீரர் காயம்..!
2 ஆவணி 2024 வெள்ளி 09:45 | பார்வைகள் : 8842
காவல்துறை வீரர் ஒருவர் குற்றவாளிகளக் கைது செய்யும் நோக்கோடு RER B பயணிக்கும் தொடருந்து தண்டவாளம் ஒன்றில் பாய்ந்து காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் பரிஸ் 5 ஆம் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இரு குற்வாளிகளைத் துரத்திச் சென்ற நிலையில், Port-Royal நிலையத்தின் அருகே உள்ள தண்டவாளத்தில் இறங்கி அவர்கள் தப்பிச் சென்றனர். துரத்திச் சென்ற காவல்துறை வீரர் ஒருவரும் தண்டவாளத்தில் குதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் குறித்த வீரர் காயமடைந்துள்ளார். அதிஷ்ட்டவசமாக தொடருந்து எதுவும் வரவில்லை. முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பிச் சென்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan