பரிஸ் : இந்திய ஒலிம்பிக் தூதுக்குழுவின் மகிழுந்து - காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதி விபத்து!

1 ஆவணி 2024 வியாழன் 07:37 | பார்வைகள் : 9200
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள வீரர்களுடன் பரிசுக்கு வருகை தந்துள்ள தூதுக்குழுவினர் ஒருவரது மகிழுந்து காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
கோல்ஃப் விளையாட்டு வீராங்கனை ஒருவரும் அவரது உறவினர் ஒருவரும் மகிழுந்தில் பயணித்த வேளையில், பரிஸ் 3 ஆம் வட்டாரத்தின் Boulevard Saint-Denis மற்றும் Boulevard de Strasbourg பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. ஜூலை 30, செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றதாகவும், காவல்துறையினரின் மகிழுந்துடன் இவர்களது மகிழுந்து மோதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இளம் பெண் வீராங்கனையும், அவரது உறவினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலக்கத்தகடு இல்லாத மற்றொரு மகிழுந்து ஒன்றை காவல்துறையினர் துரத்திச் சென்றிருந்தபோது, இவர்களது மகிழுந்துடன் மோத நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1