Allocation de rentrée scolaire' பாடசாலைக்கு திரும்புவதற்கான கொடுப்பனவு பெற தாயாராகுங்கள்.

1 ஆவணி 2024 வியாழன் 06:36 | பார்வைகள் : 9955
ஒவ்வொரு கல்வியாண்டு ஆரம்பிக்கும் போதும் பாடசாலைக்கு திரும்புவதற்கான கொடுப்பனவு 'ARS' அரசால் வழங்கப்படுவது வழமையான ஒரு விடயம். இந்த கல்வியாண்டுக்கான கொடுப்பனவுகள் ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் வழங்கப்படவுள்ளது. 6 வயது முதல் 18 வயது வரையான பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் 'CAF' இணையத்தில் உள்ள உங்களின் கணக்கில் உங்கள் பிள்ளைகள் கற்க்கும் பாடசாலையின் முகவரி, அவர்கள் தொடர்ந்தும் கேட்கிறார்கள் என்ற உறுதிமொழி போன்றவற்றை நிரப்புவதன் மூலம் குறிந்த கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியும்.
வயதுக்கு ஏற்ப கொடுப்பனவின் தொகைகள் மாறுபடும். 6 வயது முதல் 10 வயது வரை ஒவ்வொரு மாணவனுக்கும் 416.40 யூரோக்கள், 11 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு, 439.38 யூரோக்கள், 15 வயது முதல் 18 வயது வரை, 454.60 யூரோக்கள் வழங்கப்படும். பெற்றோரின் வருமானத்திற்கு ஏற்ப குறித்த தொகை 4% சதவீதம் முதல் 5% சதவீதம் வரை இவ்வாண்டு அதிகரித்து உள்ளது.
பாடசாலை பொருட்கள் மற்றும் மாணவர்களின் ஆடைகள் உட்பட பல்வேறு செலவுகளைச் சமாளிக்க இந்த உதவி அரசால் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இன்றிலிருந்து CAF (caisse allocation de familiale) உள்ள உங்களின் கணக்கில் பதிவுகளை செய்வதின் மூலம் குறித்த தொகையை நீங்கள் இம்மாத நடுப் பகுதியில் பெற்றுக் கொள்ள முடியும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1