பிரசாந்த் போட்டுடைத்த ரகசியம்!
31 ஆடி 2024 புதன் 14:49 | பார்வைகள் : 10173
51 வயதை எட்டியுள்ள நடிகர் பிரசாந்த், கடைசியாக ஹீரோவாக நடித்திருந்த திரைப்படம் ஜானி. 2018-ஆம் ஆண்டு மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், தோல்வியை சந்தித்த நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக இவர் ஹீரோவாக நடித்த ஒரு படம் கூட வெளியாகவில்லை.
ஆனால் ராம் சரணுக்கு அண்ணனாக தெலுங்கில் 'வினயா விதேய ராம' என்கிற படத்தில் நடித்திருந்திருந்தார். இதை தொடர்ந்து, தளபதி விஜய்யுடன் தற்போது 'GOAT' படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே பிரஷாந்த் நடித்து முடித்து, ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்ட 'அந்தகன்' படத்தை தூசு தட்டி, வெளியிட தயாராகியுள்ளார் இப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன்.
இப்படம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் புரோமோஷன் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் பிரசாந்த். அந்த வகையில் கலா மாஸ்டருக்கு இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், ஒரு வேலை நடிகராகவில்லை என்றால் என்னவாக ஆகி இருப்பேன் என்பதை பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
பிரசாந்தின் தந்தை ஒரு நடிகர் என்பதால், நடிப்பு துறையே தனக்கு வேண்டாம் என அவர் முடிவு செய்ததாகவும். நான் நடிகராக அறிமுகமாவதற்கு முன் திரைத்துறையை சேர்ந்த பலருக்கு என் தந்தைக்கு திருமணம் ஆன தகவலே தெரியாது. காரணம் என் அம்மா மிகவும் பிரைவசியை விரும்புவபர். எனவே என் தந்தை திருமணம் ஆகி குழந்தைகைகள் இருப்பதை தெரிவிக்கவில்லை.
ஒருமுறை படம் ஒன்றிற்கு என் தந்தையை சிலர் சந்திக்க வந்த போது, மார்ஷல் ஆர்ட்ஸ் நான் கற்று கொண்டிருந்ததை பார்த்த பின்னர் தான் தியாகராஜனுக்கு திருமணம் ஆகி 17 வயதில் மகன் உள்ளார் என்கிற தகவலே தெரியவந்தது. அப்போது அப்பாவுக்கு தெரிந்த பலர் என்னை சினிமாவில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டினர்.
நான் MBBS படிப்பதற்கு என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதி விட்டு ரிசல்ட்டுக்கு வெயிட் பண்ணிய சமயத்தில் தான்... 'வைகாசி பொறந்தாச்சு' பட வாய்ப்பு கிடைத்தது. அதில் எல்லோருமே புதியவர்கள் தான். என் தந்தைக்கு ஒரு தயக்கம் இருந்தாலும், நீ லீவில் சும்மா இருப்பதற்கு... ஒரு அன்பவத்திற்காக இந்த படத்தில் நடி என கூறினார்.
மேலும் இந்த படம் ஹிட் ஆனால் சினிமாவில் உனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக நினைத்து கொள்வோம். இல்லை என்றால்... நீ ஆசை பட்ட மருத்துவம் படி என கூறினார். அப்படி நான் ஜாலியாக நடித்த படம் தான் 'வைகாசி பொறந்தாச்சு'. இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால்... கதாநாயகனாக மாறியதாக தெரிவித்துள்ளார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan