ரஜினி மற்றும் அஜித் உடன் மோதும் சிவகார்த்திகேயன்?

31 ஆடி 2024 புதன் 14:45 | பார்வைகள் : 5280
ரஜினி மற்றும் அஜித் உடன் விஜய் ரசிகர்கள் மோதி வரும் நிலையில் தற்போது ரஜினி மற்றும் அஜித் படங்களுடன் மோத சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான ’அமரன்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே தீபாவளி தினத்தில் தான் ரஜினியின் ’வேட்டையன்’ படமும் வெளியாக இருப்பதாக கூறப்படுவதால் இரு படங்களும் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதே நாளில் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படமும் வெளிவர வாய்ப்பு உள்ளதால் மும்முனை போட்டி ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதேபோல் அஜித்தின் ’குட் பேட் அக்லி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தினத்தில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ’எஸ்கே 23’ படமும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே தளபதி விஜய் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு, முழு நேர அரசியல்வாதிவிட்டால், தளபதியின் இடத்தை பிடிப்பதற்காக ரஜினி மற்றும் அஜித் உடன் சிவகார்த்திகேயன் மோதுவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1