ஒலிம்பிக் : அவதானம்.. நுழைவுச் சிட்டைகள் விற்பனையில் ஈடுபடும் நூற்றுக்கும் மேற்பட்ட போலி இணையத்தளங்கள்!
30 ஆடி 2024 செவ்வாய் 14:51 | பார்வைகள் : 10779
ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச் சிட்டைகளை விற்பனை செய்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலி இணையத்தளங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்றே அசலாக வடிவமைக்கப்பட்ட போலியான இணையத்தளங்கள் அவை எனவும், அவற்றினை நம்பி மோசடிக்கு உள்ளாக வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tickets-paris24. com அல்லது www.ticketsparis2024. com போன்ற இணையத்தளங்கள் முழு மூச்சாக இயங்கி வருவதாகவும், அவை முற்றுமுழுதாக போலியானவை எனவும் தெரிவிக்கப்படுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 338 இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், Orange, SFR, SFR Fibre, Société Réunionnaise du Radiotéléphone (SRR), Free, Bouygues Télécom மற்றும் Outremer télécom போன்ற இணைய வழங்குனர்களால் மேற்படி இணையத்தங்களுக்குள் நுழைய அனுமதி அளிக்க வேண்டாம் என பிரெஞ்சு நீதிமன்றதால் கோரப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்குள் இந்த கட்டுப்பாட்டினை அவர்கள் கொண்டுவரவேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan