பிரித்தானியாவில் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை - 2 பேர் கைது
29 ஆடி 2024 திங்கள் 12:48 | பார்வைகள் : 7428
பிரித்தானியாவில் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டனில் வலதுசாரி பேரணியை எதிர்த்து நடந்த எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த வன்முறைக்கு காரணமான 2 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
"Stand Up To Racism" என்ற குழு ஏற்பாடு செய்த பாசிச எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த வன்முறையில்,
போராட்டக்காரர் ஒருவர் தலையில் காயம் அடைந்ததாகவும், பின்னர் பொலிஸாரால் முதலுதவி அளிக்கப்பட்டு மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மெட்ரோபொலிட்டன் பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
தீவிர வலதுசாரியான Tommy Robinson தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை எதிர்த்து எதிர்ப்பு போராட்டக்காரர்கள் பேரணி நடத்திய போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சாட்சிகள் மற்றும் வீடியோ ஆதாரங்களை பொதுமக்களிடம் பொலிஸார் முறையிட்டுள்ளனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan