Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : தீயணைப்பு படையினர் மீது தாக்குதல்.. நூதன காரணம்..!

பரிஸ் : தீயணைப்பு படையினர் மீது தாக்குதல்..  நூதன காரணம்..!

29 ஆடி 2024 திங்கள் 06:50 | பார்வைகள் : 9757


பரிசைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் சனிக்கிழமை இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

பரிஸ் 10 ஆம் வட்டாரத்தின் Quai de Valmy பகுதியில், நள்ளிரவு 1 மணி அளவில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. கட்டிடம் ஒன்றில் தீ பரவியதை அடுத்து, தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயினை அணைக்க முற்பட்டபோது, அங்கிருந்த ஒருவர் எரிந்துகொண்டிருந்த வீட்டின் மோது சிறுநீர் கழித்துள்ளார். அதனை தடுத்து நிறுத்த முற்பட தீயணைப்பு படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  விசாரணைகளை 10 ஆம் வட்டார காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்