மூன்றாவது தங்கம்.. ஜனாதிபதி மக்ரோன் வாழ்த்து!

28 ஆடி 2024 ஞாயிறு 19:51 | பார்வைகள் : 10221
நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பிரான்ஸ் தனது மூன்றாவது தங்கப்பதக்கத்தை இன்று பெற்றுள்ளது.
ஆண்களுக்கான தனிநபர் 400 மீற்றர் மெட்லே நீச்சல் (Men's 400m Individual Medley) போட்டியில் இந்த தங்கம் பிரெஞ்சு வீரர் Léon Marchand இற்கு கிடைத்துள்ளது. அவருக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். ‘பிரான்ஸ் பெருமை கொள்கிறது’ (La France est fière) என அவர் தெரிவித்துள்ளார். ‘ஒலிம்பிக் போட்டிகளில் இது ஆரம்பம் தான். நாங்கள் மேலும் சாதனைகளை நிகழ்த்துவோம்.!’ எனவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் கப்ரியல் அத்தால், விளையாட்டுத்துறை அமைச்சர் Amélie Oudéa-Castéra ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்ய தவறவில்லை.
பிரான்ஸ் தற்போது மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களை வென்றுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1